வடக்கில் நியதிச் சட்டங்களை உருவாக்க முதலமைச்சர் தலைமையில் விசேட குழு அமைப்பு
வடக்கு மாகாண சபைக்கு நியதிச் சட்டங்களை ஆக்குவதற்கான குழு ஒன்று
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது என இச்சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார் .
வடக்குமாகாண சபையின் நிர்வாக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காகவும் அச்சபையின் சட்ட ஒழுங்குகளை சீர்செய்வதற்காகவும் நியதிச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் . ஆனால் வடக்கு மாகாகண சபை அமைக்கப்பட்டு இன்னமும் நியதிச் சட்டங்கள் உருவாக்கப்படவில்லை .
இதனைக் கருத்தில் கொண்டே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் இதுபோல் இச்சபையின் நிர்வாக நடவடிக்கைகளைச் சீர்செய்வதற்காக மேலும் நான்கு சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .
வடக்கில் நியதிச் சட்டங்களை உருவாக்க முதலமைச்சர் தலைமையில் விசேட குழு அமைப்பு
Reviewed by NEWMANNAR
on
February 19, 2014
Rating:

No comments:
Post a Comment