சுதந்திர தினத்தில் கலந்து கொண்ட பொலிஸாருக்கு 3 நாட்கள் விடுமுறை
இலங்கையின் தேசிய சுதந்திர தின வைபவ ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொலிஸாருக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 66ஆவது சுதந்திரதினத்தின் பிரதான வைபவம் இன்று கேகாலை சுதந்திர மாவத்தையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக ஒரு மாதகாலமாக கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட பொலிஸாருக்கு நாளை தொடக்கம் இந்த விடுமுறை வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் சுதந்திர தின ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொலிஸ் படைக் குழுக்களின் கட்டளை அதிகாரிகள் ஐவருக்கும் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் இந்த விடுமுறை அறிவிப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தில் கலந்து கொண்ட பொலிஸாருக்கு 3 நாட்கள் விடுமுறை
Reviewed by NEWMANNAR
on
February 04, 2014
Rating:

No comments:
Post a Comment