2019 இல் க.பொ.த. சாதாரணதரத்தில் இரண்டாம் மொழிச் சித்தி கட்டாயம்
2019ம் ஆண்டு முதல் அரச சேவைக்கு நியனம் பெறும் அனைவரும் க.பொ.த.(சாதாரணம்) தரப் பரீட்சையில் இரண்டாம் மொழியில் சித்தியடைந்திருப்பது கட்டாயமாகுமென பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசகரும மொழிக் கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த முறைமை கட்டாயப்படுத்தப்படுவதுடன் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் இரண்டாம் மொழி சித்தியடையாதவர்கள் அரச சேவைக்குத் தகைமையில்லாதவர்களாகக் கணிக்கப்படுவர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க தமிழ்மொழி மூலம் க.பொ.த. பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் இரண்டாம் மொழியான சிங்கள மொழியிலும், சிங்கள மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றுவோர் தமிழ் மொழியிலும் சித்தி பெறுவது முக்கியமெனவும் அமைச்சு அறிவித்துள்ளது.
2019 இல் க.பொ.த. சாதாரணதரத்தில் இரண்டாம் மொழிச் சித்தி கட்டாயம்
Reviewed by NEWMANNAR
on
February 04, 2014
Rating:

No comments:
Post a Comment