மன்னார் முசலிப்பிரதேச ஒருங்கிணைப்புக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது-படங்கள்
முசலிப்பிரதேச செயலகத்தில் முசலிப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்காரியாலயம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் முசலிப்பிரதேச செயலாளர் ,திணைக்களத் தலைவர்கள் (கல்வி,போக்குவரத்து,சுகாதாரம்,குடியேற்றம்) கிராம உத்தியோகத்தர்கள் ,சமூர்த்தி உத்தியேகத்தர்கள் ,கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள் ,கிராமத் தலைவர் கள்,பொதுமக்கள் எனப் பெருந் தொகையானோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இளம் துடிப்பு மிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்கள் மக்களுடன் நேரடியாக கலந்து உரையாடல்களை மேற்கொண்டு இனம் காணப்பட்ட பிரச்சினைகட்கான (வீதிப் பிரச்சினை ,ஜீவனேபாய பிரச்சினை ,வீட்டமைப்புத் தேவை ,பாடசாலைக்கட்டிடம் ,ஆசிரியர் தேவை ,நீர்ப்பாசன பிரச்சினை ,வரட்சி நிவாரணம்) தீர்வுகளாக உடனுக்குடன் திணைக்கள தலைவர்களுக்கு இப்பிரைச்சினைகளைத் தீர்க்குமாறு பணிப்புரைகளை வழங்கியதைக் காணமுடிந்தது.
இதே நிகழ்வில் திவிநெகும செயற்றிட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 52 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. 29 சிறுகைத் தொழிலாளர்களின் தொழிலை ஊக்கு விக்கும் முகமாக மீன்பிடி வலைகள் ,நீர்ப்பம்பிகள் ,தெளிகருவி என்பன வழங்கப்பட்டன.கால்நடை வளர்ப்போராகத் தெரிவு செய்யப்பட்டோருக்கும் தரமான கால் நடைகள் கொள்வனவு செய்வதற்குரிய பணமும் நிகழ்வில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கே.சி.எம்.அஸ்ஹர்
மன்னார் முசலிப்பிரதேச ஒருங்கிணைப்புக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
February 14, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment