அண்மைய செய்திகள்

recent
-

கண் விழியுங்கள் இந்துக்களே! வவுனியாவில் துண்டுப்பிரசுரம் - படங்கள்

சிவசேனா என்ற பெயரில் கண்விழியுங்கள் இந்துக்களே இந்து சமயம் அழிந்தால் அழியட்டும் என்ற எண்ணம் கொண்ட இந்து சமயத்தவரா நீங்கள்? ஆம் என்றால் இதை தொடர்ந்து வாசிக்காதீர்கள் என்ற தலைப்புடன் வவுனியா முழுவதும் துண்டு பிரசுரங்கள் போடப்பட்டிருந்தன.

இத்துண்டு பிரசரத்தில் இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற்ற முயற்சிப்பது இல்லை, இந்துக்கள் மற்ற மதத்தவரின் பழக்கவழக்கங்களை தரகுறைவாக பேசுவதும் இல்லை, இந்துக்கள் பிற மத கடவுளர்களை தீய சக்திகளாக (சாத்தான்களாக) சித்தரிப்பதில்லை, உலகின் பழமையான மதமாக இருந்தாலும் பெரும்பான்மையான மதமாக இல்லாத்தற்கு காரணம் நாம் படையெடுத்து சென்ற போதும் கட்டாய மதமாற்றம் செய்யாதது இருந்தும் எம்மை படையெடுத்து வந்த அந்நியர்கள் எம்மை கட்டாய மதமாற்றம் செய்தனர்.

இன்றும்கூட எம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றனர். இந்துமதம் எமக்கு தந்த சுதந்திரத்தை வேற்று மதத்தவர்கள் ஏன் எம்மவர்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாக வேட்டையாடி வருகின்றார்கள்.

இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் நாம் அனைவரும் கழுத்தில் சிலுவையுடனும் தலையில் குல்லாவுடன் தான் திரிவோம்.

நாம் ஒன்றும் மற்ற மதத்தவர் போன்று மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் கொள்கையுடைய ஈனப்பிறவிகளல்ல. எமக்கு வெளிநாட்டிலிருந்து மத அழிப்பிற்கென பண உதவியோ பொருளுதவியோ கிடைப்பதில்லை.

காதல் எனும் வலை விரித்து திருமணமெனும் ஆயுதத்தால் எம்மவரை மதம் மாற்றும் காமுகர்களும் நாமில்லை.

இனியும் நாமிதை சுட்டி காட்டாதிருந்தால் நாம் கடவுளுக்கு செய்யும் துரோகமாகும். என குறித்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கண் விழியுங்கள் இந்துக்களே! வவுனியாவில் துண்டுப்பிரசுரம் - படங்கள் Reviewed by NEWMANNAR on February 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.