புலம்பெயர்ந்தோருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும்: விக்னேஸ்வரன்
போருக்கு பின்னர் மீள் அமைப்புக்களை மேற்கொள்வதற்காக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படுவது அவசியம் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
போரின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் சமூக பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் போது அவர் இதனை கோரிக்கையாக முன்வைத்தார்.
இந்த விடயம் இலங்கையின் பாதுகாப்பு விடயத்துடன் தொடர்புடையது என்ற போதும் சாத்தியமான விடயமாகவே இருக்கும் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
புலம்பெயர்ந்தோர் மத்தியிலேயே நிதி மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பொதிந்துள்ளன. அவை போரின் பின்னர் வடக்கு கிழக்கை கட்டியெழுப்ப அவசியமானவை.
எனவே இரட்டை குடியுரிமை என்பது முக்கியமான அம்சமாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை வெளிநாடுகளில் வசிப்போரிடம் இருந்து நிதி வருகையை அனுமதிக்க அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இணக்கம் வெளியிட்டமை குறித்து விக்னேஸ்வரன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.
புலம்பெயர்ந்தோருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும்: விக்னேஸ்வரன்
Reviewed by NEWMANNAR
on
February 15, 2014
Rating:

No comments:
Post a Comment