அண்மைய செய்திகள்

recent
-

சகல பரீட்சை முடிவுகளையும் இணையத்தளம் குறுந்தகவல் சேவைகளினூடாக வெளியிட நடவடிக்கை

பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற சகல பரீட்சை முடிவுகளையும் இணையத்தளம் மற்றும் குறுந்தகவல் சேவைகளினூடாக வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


இந்நடவடிக்கையினை இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையமும் இலங்கை பரீட்சைத் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் குறிப்பிடுகிறார்.

வருடாந்தம் பரீட்சைத் திணைக்களத்தினால் 300 பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. இருப்பினும், க.பொ.த. உயர்தர, சாதாரண தர பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் என்பனவே இணையத்தளம் மற்றும் குறுந்தகவல் சேவைகளினூடாக வெளியிடப்படுகின்றன.

பரீட்சார்த்திகளின் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு சகல பரீட்சை முடிவுகளையும் இணைத்தளம் மற்றும் குறுந்தகவல் சேவைகளினூடாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் குறிப்பிடுகிறார்.

அத்துடன், பரீட்சை முடிவுகளை தெரிந்துகொள்ள விரும்புவோர் www.results.exams.lk என்ற இணையத்தள முகவரிக்குச் செல்வதனூடாகவோ அல்லது  'exams' என கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து 1919 என்ற இலக்கத்திற்கு அனுப்புவதனூடாகவோ பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சகல பரீட்சை முடிவுகளையும் இணையத்தளம் குறுந்தகவல் சேவைகளினூடாக வெளியிட நடவடிக்கை Reviewed by NEWMANNAR on February 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.