முல்லைத்தீவு,கிளிநொச்சி மாவட்டங்களில் மதுவரித் திணைக்களம் 2013 இல் 16,23,500 ரூபா தண்டமாக வசூல்
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மதுவரித் திணைக்களத்தினால்கடந்த 2013 ஆம் ஆண்டு 16 லட்சத்து 23 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக மதுவரித்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மதுவரித் திணைக்களத்தினால் கடந்த 2013 ஆம் ஆண்டு கசிப்பு மற்றும் அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் சாராயம் , கள்ளு விற்பனை சிறு வயதினருக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தல் போன்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 16 லட்சத்து 23 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக மதுவரித்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட ஒருவரும் , கோடா வைத்திருந்த 05 பேரும் , கசிப்பு உடைமையில் வைத்திருந்த 35 பேரும் , அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் சாராயம் வைத்திருந்த 08 பேரும் , பியர் வைத்திருந்த ஒருவரும் , கள்ளு விற்பனை செய்த 14 பேரும் , மேலதிகமாகக் கள்ளு வைத்திருந்த 233 பேரும் 21 வயதிற்குட்பட்ட சிறுவருக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 40 பேர் உள்ளிட்ட சுமார் 337 பேருக்கு எதிராக கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்ககளின் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது .
முல்லைத்தீவு,கிளிநொச்சி மாவட்டங்களில் மதுவரித் திணைக்களம் 2013 இல் 16,23,500 ரூபா தண்டமாக வசூல்
Reviewed by NEWMANNAR
on
February 04, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 04, 2014
Rating:

No comments:
Post a Comment