புதிய பணிப்பாளருக்கு லேடி ரிஜ்வே வைத்தியசாலை ஊழியர்கள் எதிர்ப்பு
வைத்தியசாலைக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து தடங்கள் ஏற்பட்டது.
கம்பஹா பிரதேச சுகாதார அத்தியட்சகராக இருந்த லின்டன் பத்மசிறி இன்று (31) லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் முன்னாள் பணிப்பாளர் ரத்னசிறி ஹேவகேவை மீண்டும் பணிப்பாளராக நியமிக்கும் படி கோரியே வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இது குறித்து அத தெரண செய்திப் பிரிவு சுகாதார அமைச்சிடம் வினவியது,
ரத்னசிறி ஹேவகே இதுவரை பதில் பணிப்பாளராக செயற்பட்டதாகவும் அரச சேவை ஆணைக்குழுவால் பணிப்பாளராக லின்டன் பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக ரத்னசிறி ஹேவகே செயற்படுவார் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
புதிய பணிப்பாளருக்கு லேடி ரிஜ்வே வைத்தியசாலை ஊழியர்கள் எதிர்ப்பு
Reviewed by Anonymous
on
February 01, 2014
Rating:

No comments:
Post a Comment