அண்மைய செய்திகள்

recent
-

தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பொன்விழா

கண்டி தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பொன்விழா நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை (03) நடைபெறவுள்ளது.

இரண்டு அமர்வுகளாக நடைபெறவிருக்கும் இப் பொன்விழா வைபவத்தின் முதல் அமர்வு காலை 9.00 - 12.00 மணி வரையும், இரண்டாம் அமர்வானது பிற்பகல் 2.00 - 5.00 மணி வரையும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கல்லூரி அதிபர் ஐ.எம். ஜெமீல் தலைமையில் நடைபெறும் இவ்விழாவின் முதலாம் அமர்வில் பிரதம அதிதியாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவும், கௌரவ அதிதிகளாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ.காதர், மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக, மத்திய மாகாண சபைத் தலைவரும் ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளருமான மஹிந்த அபேகோன், பிரதமரின் புதல்வரும் அந்தரங்கச் செயலாளரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான அனுராத ஜயரத்ன, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான உவைஸ், காமினி விஜய பண்டார ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ்விழாவின் இரண்டாம் அமர்வில் பிரதம அதிதியாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்லவும், கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீமும் விசேட அதிதிகளாக மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஹேவாஹெட்ட தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளருமான சானக அயிலப்பெரும, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜே.ஜெய்னுல்லாப்தீன்(லாபீர் ஹாஜி), பாத்த ஹேவாஹெட்ட பிரதேச சபை தலைவர் ராஜநாயக்க, ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ்விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகளும் அழைப்பு விடுக்கின்றனர்.

இந்த நிகழ்வுக்கு தெரண தொலைக்காட்சி மற்றும் அத தெரண தமிழ் இணையத்தளம் ஆகியன ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பொன்விழா Reviewed by Anonymous on February 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.