அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்களின் சங்கங்களுக்கான விசேட ஒன்றுகூடல் -படங்கள்


நேற்றைய தினம் 07-02-2014 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் 101 நாள் விசேட வேலைத்திட்டத்தின் கீழான வடக்கு மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்களின் சங்கங்களின் தலைவர்இ செயலாளர் பொருளாளர் உப தலைவர் உப செயலாளர் என்ற அடிப்படையில் 5 மாவட்டங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளுக்கான விசேட ஒன்றுகூடல் இடம்பெற்றது. இவொன்ருகூடலுக்கு    வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.டெனிஸ்வரன் அவர்கள் தலைமைதாங்கினார்.

இதன் போது வடக்கு மாகாணத்தின் போக்குவரத்து ஒழுங்குகளுக்கான வடக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை ஒன்று விரைவில் சட்ட மூலங்களை நிறைவேற்றிக்கொண்டு ஆரம்பிக்கவுள்ளதாகவும் மக்களுக்கு ஒரு ஒழுங்கான போக்குவரத்து சேவை வழங்குவது தொடர்பிலும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் சங்கங்களுக்கிடையில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பிலும்  கலந்த்துரையாடப்பட்டது. சுமார் மூன்று  மணிநேர கலந்துரையாடலின் போது அமைச்சின் செயலாளர் திரு ஆர்.வரதீஸ்வரன் அவர்களும் மன்னர் பொலிஸ் ர் ஞ ஐ  திரு.துசார தளுவத்த மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் திரு ப.ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை  ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.






வடக்கு மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்களின் சங்கங்களுக்கான விசேட ஒன்றுகூடல் -படங்கள் Reviewed by Author on February 08, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.