அண்மைய செய்திகள்

recent
-

எழுத்தூர் கிராமத்தைச் இளம் தாய் தீ மூட்டி உயிரிழப்பு

மன்னார் மாவட்டத்தின் எழுத்தூர், தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்த இளம் தாயான நிஸாந்தன் தேவிகா( வயது 27) என்பவர் தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்ததாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். 

 புதன்கிழமை (12) இரவு அப்பகுதியிலுள்ள கடைக்குச் சென்று மண்ணென்ணை வாங்கிக்கொண்டு வீடு சென்ற குறித்த தாய், வீட்டுச் சமயலறையில் தனக்குத்தானே தீ மூட்டியதாக விசாரணையிலிருந்து தெரியவருவதாகவும் பொலிஸார் கூறினர். 

 இந்நிலையில், வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த அவரது கணவர் தனது மனைவி தீயில் எரிவதைக் கண்டு கூச்சலிட்டதாகவும் இதனைத் தொடர்ந்து அயலவர்கள் வந்து தீயை அணைத்து குறித்த தாயை மன்னார் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் கூறினர். இருப்பினும், இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 02 பிள்ளைகளின் தாய் ஆவார். இது தொடர்பில் விரிவான விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எழுத்தூர் கிராமத்தைச் இளம் தாய் தீ மூட்டி உயிரிழப்பு Reviewed by NEWMANNAR on March 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.