மன்னார் பேராயர் ஜோசப் ஆண்டகை நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைக்க முயற்சிக்கின்றார் – விமல் வீரவன்ச
மன்னார் பேராயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சித்து வருவதாக வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளுடன் இணைந்து கொண்டு அவர் இவ்வாறு நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிங்களப் பெரும்பான்மை மக்களினால் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பேராயர் ஜோசப், சர்வதேச ரீதியாக பிரச்சாரம் செய்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கில் இடைக்கால நிர்வாகமொன்றை நிறுவ வேண்டுமென பேராயர் சர்வதேச சமூகத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும், வடக்கின் அனைத்து பெண்களையும் படையினர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் யுத்தம் செய்து பெற்றுக்கொள்ள முடியாதவற்றை ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊடாக பேராயர் ஜோசப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றார் என விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
மன்னார் பேராயர் ஜோசப் ஆண்டகை நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைக்க முயற்சிக்கின்றார் – விமல் வீரவன்ச
Reviewed by NEWMANNAR
on
March 17, 2014
Rating:

No comments:
Post a Comment