அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கறுப்பு பட்டி அணிந்து போராட்டம்

வடக்கில் ஆசிரியர்கள் காணாமல் போதல் எலும்புக் கூடுகள் மீட்பு போன்ற சம்பவங்களைக் கண்டித்து எதிர்வரும் 21ஆம் திகதி வட மாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கறுப்பு பட்டி அணிந்து கடமைக்கு செல்வர் என்றும் அன்றைய தினம் மாலை 2.00 மணிக்கு யாழ் பஸ் நிலையம் முன்னால் போராட்டமொன்றையும் நடத்தவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். 


2013 செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி காணாமல் போன வவுனியா நேரியகுளம் அல்-ஹைரியா முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் கார்த்திகேயன் நிரூபன் கடந்த வாரம் மாங்குளம் பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டார். 

இவரது உறவினர்கள் இவரது உடமைகளை வைத்து இறந்தவர் நிரூபன் என அடையாளம் கண்டனர். இவரது எலும்புக் கூடுகள் மற்றும் எச்சங்கள் மீட்கப்பட்டு நேற்று கோப்பாயில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றதாகவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்
வட மாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கறுப்பு பட்டி அணிந்து போராட்டம் Reviewed by NEWMANNAR on March 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.