விவசாயிகளுக்கான ஓய்வூதியம் இன்று முதல்
2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குரிய விவசாயிகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளை இன்று 26ஆம் திகதி முதல் தபால் நிலையங்கள் ஊடாக விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும் என கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
ஓய்வூதியம் பெறத் தகுதியான 1,28,000 விவசாயிகளும் தாம் விண்ணப்பித்த தபாலகங்கள் ஊடாக இன்று முதல் தமது ஓய்வூதிய பணத்தை பெற முடியும்.
பெப்ரவரி மாதத்துக்கான ஓய்வூதிய பணம் சுமார் 17 கோடி ரூபாவை கமத்தொழில மற்றும் கமநல காப்புறுதி சபை நேற்று தபாலகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளது என சபையின் பணிப்பாளர் நாயகம் பண்டுக்க வீரசிங்க அறிவித்துள்ளார்
விவசாயிகளுக்கான ஓய்வூதியம் இன்று முதல்
Reviewed by NEWMANNAR
on
March 26, 2014
Rating:

No comments:
Post a Comment