இந்துக்கள் பூதவுடலை புதைப்பதில்லை, மன்னாரில் மயானம் என்பது கட்டுக்கதை – சீ.வி.விக்னேஸ்வரன்
மன்னார் மனித புதைகுழி மயான பூமி என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கூறியமை கட்டுக்கதை போல் காணப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றின் போது, வட மாகாண முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து
இன்று வன்னியில் நடப்பதை எடுத்துக் கொள்வோம். மாந்தையில் மனித எலும்பு கூடுகள் காணப்பட்ட இடம், ஒரு மயான பூமி என்றுள்ளார் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள பணிப்பாளர் நாயகம். நாம் ஆராய்ந்து பார்த்ததில், 60 வருடங்களுக்கு முன்னர் பூர்வாங்க வரைப்படம் இலக்கம், எஸ் 677ஆனது, 1955ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 2ஆம் திகதி அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் துண்டுகள் 31வும், 32வும் இணையும் இடத்தில் தான் மேற்படி மயான பூமி என்று கூறப்படும் இடம் இருந்திருக்க வேண்டும். ஆனால் இவ்விடத்திற்கு ஒரு பக்கம் தெரு, மறுபக்கம் குளம். இந்த துண்டு 31 ஆனது திருகேதீஸ்வரத்திற்கு கொடுப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் துண்டு. தெருவின் அடுத்த பக்கத்தில் சுற்றுலா பங்களா இருந்திருக்கின்றது. இது போரின் போது அழிந்து விட்டது. பழ சரக்கு கூட்டுறவு கடையொன்றும் இருந்திருக்கின்றது. மயான பூமி இருந்திருக்கின்றது என்பது கட்டு கதை போல இருக்கின்றது. கத்தோலிக்க மயான பூமியொன்று மேற்கு புறத்தில் அங்கிருந்து ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் இருப்பது உண்மை. ஆனால் மனித எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்ட இடம், இந்துக்கள் வாழ்ந்த இடம். இந்துக்கள் பிரேதங்களை புதைப்பதில்லை. எனவே பணிப்பாளர் நாயகத்தின் கூற்று கேள்விக்கு இடமாகியுள்ளது.
இந்துக்கள் பூதவுடலை புதைப்பதில்லை, மன்னாரில் மயானம் என்பது கட்டுக்கதை – சீ.வி.விக்னேஸ்வரன்
Reviewed by NEWMANNAR
on
March 17, 2014
Rating:

No comments:
Post a Comment