மன்னார் சின்னக்கருஸல் கிராமத்தில் இராணுவத்தினர் குடும்பப்பதிவுகளை மேற்கொள்கின்றனர் - அந்தோனி சகாயம்
மன்னார் தலைமன்னார் பிரதான வீதி சின்னக்கருஸல் கிராமத்தில் நேற்று புதன் கிழமை(26)
மாலை இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று குடும்பப்பதிவுகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்தார்.
நேற்று பதன் கிழமை மாலை 4.30 மணியளவில் குறித்த கிராமத்திற்கு சீருடையுடன் வருகை தந்த இராணுவத்தினர் குடும்ப உறுப்பினர் விபரங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் இருக்கின்றார்களா? என்ற விபரங்களை பதிவு செய்து கொள்வதோடு குடும்ப உறுப்பினர்கள் எவரும் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தால் அவர்களின் விபரங்களை சிவப்பு நிற பேனையினால் இராணுவத்தினர் பதிவு செய்து கொண்டு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரோ அல்லது கிராம அலுவலகரோ இன்றி இராணுவம் தன்னிச்சையாக சென்று குடும்ப பதிவுகளை மேற்கொள்ளுகின்றமையினால் அக்கிராம மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்தார்.
இது தொடர்பாக இராணுவத்திடம் கேட்ட போது மன்னார் பிரதேசச் செயலகத்தினால் பதிவுகளை மேற்கொள்ள தமக்கு பணிக்கப்பட்டதாகவும் இதனாலேயே தாம் பதிவுகளை மேற்கொள்ளுவதாக இராணுவம் தெரிவித்ததாக பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் மேலும் தெரிவித்தார்.
மன்னார் சின்னக்கருஸல் கிராமத்தில் இராணுவத்தினர் குடும்பப்பதிவுகளை மேற்கொள்கின்றனர் - அந்தோனி சகாயம்
Reviewed by NEWMANNAR
on
March 27, 2014
Rating:

No comments:
Post a Comment