மற்றுமொரு அனர்த்தத்தில் இருந்து தப்பிய மலேசிய விமானம்
மலேசிய உள்நாட்டு போக்குவரத்து விமானம் ஒன்று நடுவானில் எஞ்ஜின் ஒன்று தீப்பிடித்ததையடுத்து உடனடியாக தரையிறக்கப்பட்டது.
மலிந்தோ ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புதன்கிழமை காலை கோலாலம்பூர் அருகே உள்ள சுபாங் விமான நிலையத்தில் இருந்து டெரங்கானு விமான நிலையத்திற்கான பயணத்தினை ஆரம்பித்தது.
இந்த விமானத்தில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள் கால்பந்தாட்ட வீரர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ATR 72-600 விமானம் பயணத்தினை ஆரம்பித்து சிறிது நேரத்தில் விமானத்தின் ஒரு என்ஜினில் தீப்பிடித்தது.
இதனை தொடர்ந்து துரிதமாக செயற்பட்ட விமானி தீ பிடித்த எஞ்ஜினை நிறுத்தியதுடன் விமானத்தை உடனடியாக திருப்பினார்.
பின்னர் சுபாங் விமான நிலையத்திடம் அனுமதியை பெற்று பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார்.
இதனால் பயணிகள் காயமின்றி தப்பினர். அவர்கள் அனைவரும் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சரியான நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
மற்றுமொரு அனர்த்தத்தில் இருந்து தப்பிய மலேசிய விமானம்
Reviewed by NEWMANNAR
on
March 27, 2014
Rating:

No comments:
Post a Comment