கிளிநொச்சி தர்மபுரியைச் சேர்ந்த தாயும்,மகளும் தடுத்து வைக்கப்பட்டமை பழிவாங்கும் செயல் – சுரேஷ் பிரேமசந்திரன்
சந்தேகநபரொருவருக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட பெண்ணை, தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு கிளிநொச்சி நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வஹாப்டீன் முன்னிலையில் சந்தேகநபர்கள் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஒருவருக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் கிளிநொச்சி, தர்மபுரியைச் சேர்ந்த பாலேந்திரா ஜெயக்குமாரி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த பெண் கைது செய்யப்பட்ட வேளையில், அவருடன் தங்கிருந்த அவரது மகளான 13 வயதுடைய விபூசிகாவும் பொலிஸாரால் அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த சிறுமியும் நேற்று மாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில், குறித்த சிறுமி சிறுவர் நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பட்டார்.
இதனடிப்படையில் தாயார் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட பாலேந்திரா ஜெயகுமாரியை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வவுனியா பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஜெயகுமாரியை விடுதலை செய்யுமாறும், சட்டவிரோத கைதுகளை நிறுத்துமாறும் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ். கஜேந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் பாஸ்கரா உள்ளிட்ட மேலும் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, கிளிநொச்சி தர்மபுரியில் பாலேந்திரா ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டமை தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கருத்து வெளியிட்டார்.
கிளிநொச்சி தர்மபுரியைச் சேர்ந்த தாயும்,மகளும் தடுத்து வைக்கப்பட்டமை பழிவாங்கும் செயல் – சுரேஷ் பிரேமசந்திரன்
Reviewed by NEWMANNAR
on
March 16, 2014
Rating:

No comments:
Post a Comment