திரியாய் கிராமத்தில் இடம்பெற்றுள்ள அபகரிப்பு தொடர்பாக இரா,சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்
திருகோணமலை திரியாய் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமான பழமையான ஆறு தூண்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
குறித்த ஆலயத்தின் திருப்பணிகளின்போது ஆறு பழம்பெரும் தூண்கள் நீக்கப்பட்டு வேறு தேவைக்காக பயன்படுத்தும் நோக்கத்துடன் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இம்மாதம் நான்காம் மற்றும் ஐந்தாம் திகதிகளில் சில கூலியாட்கள் மற்றும் பொலிஸாருடன் கோயில் வளாகத்திற்குள் பிரவேசித்த பௌத்த பிக்கு ஒருவர் எவ்வித அனுமதியும் இன்றி அந்தத் தூண்களை எடுத்துச் சென்றுள்ளதாக இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மைக்காலமாக இத்தகைய இழிவான செயல்கள் அதிகரித்து வருவதாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ள அவர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
திரியாய் பிள்ளையார் கோயிலில் இருந்து அபகரிக்கப்பட்ட பழமையான தூண்களை மீண்டும் கோயில் நிருவாகத்தினரிடம் சேர்ப்பதற்கு ஆவணம் செய்யுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
எவ்வாறிருந்த போதிலும், இது ஒரு பகற்கொள்ளையாகும் என்பதை தாங்களும் ஏற்பீர்கள். அன்மைக்காலமாக இது போன்ற இழிவான செயல்கள் அதிகரித்து வருவதோடு, இவ்வக்கிரமங்களை செய்பவர்கள் சட்டத்தினால் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்டாது என்ற துணிச்சலுடனேயே இவைகளை மேற்கொள்வது கவலைக்கிடமானது.
இந்த மோசமான செயலுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுத்து அபகரிக்கப்பட்ட அத்தூண்களை மேற்படி கோயிலின் நம்பிக்கையார்களிடம் மீண்டும் சேர்ப்பிப்பதற்கு ஆவண செய்யுமாறு அதிமேதகு ஜனாதிபதி அவர்களை பனிவுடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
திரியாய் கிராமத்தில் இடம்பெற்றுள்ள அபகரிப்பு தொடர்பாக இரா,சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்
Reviewed by NEWMANNAR
on
March 16, 2014
Rating:

No comments:
Post a Comment