அண்மைய செய்திகள்

recent
-

பாகிஸ்தானில் 9 மாத குழந்தை மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் 9 மாத குழந்தை மீது கொலை செய்ய முயற்சித்தாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நகரொன்றில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை தாக்கியதாக குறித்த குழந்தை மீதும் , குழந்தையின் தந்தை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று நடைபெற்றதுடன் இதன்போது ஆஜர்படுத்தபட்ட 9 மாத குழந்தையை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் அடுத்த வழக்கு விசாரணைகளில் குழந்தை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவறுதலாக குழந்தை மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதானது , தவறுதலாக இடம்பெற்றதெனவும் , வழக்கை பதிவு செய்த பொலிஸ் அதிகாரியை பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்துள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்,


பாகிஸ்தானில் 9 மாத குழந்தை மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு Reviewed by NEWMANNAR on April 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.