மன்னார் ஓலைத்தொடுவாய் கர்த்தர் ஆலயத்தில் கிறிஸ்துவின் பாடுகளின் தியானம் - படங்கள்
கத்தோலிக்கர் கிறிஸ்துவின் பாடுகளை தியானிக்கும் காலமாகிய தவக்காலத்தை முன்னிட்டு மன்னார் மறை மாவட்டதின் புனித தலங்களின் ஒன்றான ஓலைத்தொடுவாய் கர்த்தர் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மறைமாவட்டத்தின் நாலா பக்கங்களிலிருந்தும் ஒன்றுக்கூடிய பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
மன்னார் மறைமாவட்டத்தின் குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சூசை அடிகளாரின் தலைமையில் அன்று கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. அதிகமான பக்தர்கள் தங்கள் பங்கு தலங்களிலிருந்து பாதயாத்திரையாக ஓலைத்தொடுவாய் கர்த்தர் ஆலயத்துக்கு வந்து பொது சிலுவைப் பாதையில் கலந்து கொண்டதுடன் அங்கு நடைபெற்ற திருப்பலியிலும் பங்குபற்றினர். இந்தக் கத்தர் ஆலயம் மிகவும் பழமை வாய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் ஓலைத்தொடுவாய் கர்த்தர் ஆலயத்தில் கிறிஸ்துவின் பாடுகளின் தியானம் - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
April 06, 2014
Rating:

No comments:
Post a Comment