ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் ; விரைவில் விசாரணை ஆரம்பம்
ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த நியமிக்கப்பட்டுள்ள தேசிய செயற் திட்டம் அறிவித்துள்ளது.
இலங்கைப் பத்திரிகை பேரவையின் ஊடாகவும் இணையத்தின் ஊடாகவும் முறைப்பாடுகளைச் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகள் தொடர்பில் விசாரணை நடாத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு அண்மையில் ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் வலியுறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் ; விரைவில் விசாரணை ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
April 06, 2014
Rating:

No comments:
Post a Comment