வட மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு கோரிக்கை
வட மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு கோரி சபைத் தவிசாளர் சீ.வி.கே. சிவஞானம், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வட மாகாண சபையின் சில உறுப்பினர்கள் தம்மிடம் முறைபாடு செய்துள்ளதாக பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
38 மாகாண சபை உறுப்பினர்களுக்கும் உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண சபைத் தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடமாகாண சபை உறுப்பினர்களின் இருப்பிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வடமாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்பின் பொருட்டு பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வட மாகாண சபையின் தவிசாளர், தமது பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அடங்கலாக 38 உறுப்பினர்களினதும் விபரங்களை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு தவிசாளர் சீ.வி.கே. சிவஞானம் அனுப்பிவைத்துள்ளார்.
வட மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
April 04, 2014
Rating:

No comments:
Post a Comment