அண்மைய செய்திகள்

  
-

இன்றைய இளைஞர்களின் தவறான வழிக்கு யுத்தமே காரணம்: சித்தார்த்தன்

இன்றைய இளைஞர்களின் தவறான பாதைக்கு யுத்தம் தான் காரணம் என புளொட் அமைப்பின் தலைவரும் வடமாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.


வவுனியா தாண்டிக்குளத்தில் வியாழக்கிழமை (3) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

இளைஞர்களை சரியான பாதையில் கொண்டுசெல்ல நல்லொழுக்கம், கல்வி, விளையாட்டு போன்றவற்றில் அவர்களை அக்கறை காட்ட வைக்க வேண்டும்.

தோல்வியும் வெற்றியும் மாறிமாறி வந்தாலும் மீண்டும் எமது சமூகம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியால் தான் எமது சமூக வாழ்கையை மாற்ற முடியும். 

வட மாகாண மாணவர்களின் கல்வி நிலை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது மிக பாரிய பின்னடைவை அடைந்து படிப்படியாக உயரும் நிலையில் பல தடைகள் இருப்பினும் எமது சமூகத்தில் கல்விதான் நிரந்தர சமூக வளர்ச்சி.

கல்வி வளர்ச்சிக்கு பௌதீக வளங்கள் மட்டும் அல்ல அதிபர், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படும் போது எமது சமூகம் ஓர் உன்னத வளர்ச்சிபாதையில் செல்லமுடியும், எனினும் பெற்றோர்களும் கூடிய கவனம் செலுத்தவேண்டும்.

இன்று எமக்கு முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் தீர்க்க முடியாவிட்டாலும், கல்வி வளர்ச்சியில் என்றும் முயற்சி எடுக்க பின்னிக்கபோவதில்லை என தெரிவித்தார்.
இன்றைய இளைஞர்களின் தவறான வழிக்கு யுத்தமே காரணம்: சித்தார்த்தன் Reviewed by NEWMANNAR on April 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.