தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்கள் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.- படங்கள்
இலங்கை கடற்பரப்பினுள் நேற்று(18) புதன் கிழமை அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்த கடற்படையினர் குறித்த மீனவர்களை இன்று(19) வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
5 படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட குறித்த 22 இந்திய மீனவர்களும் நேற்று (18) புதன் கிழமை இரவு 11 மணியளவில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பின் குறித்த மீனவர்கள் விசாரனைகளின் பின் இன்று(19) வியாழக்கிழமை மாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு குறித்த மீனவ்hகளின் படகுகளில் காணப்பட்ட வலைத்தொகுதிகளும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த 22 மீனவர்களும் தற்போது மன்னார் கடற்தொழில் பணிமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்களிடம் முழுமையான வாக்குமூலங்கள் பதிவு செய்து கொள்ளப்பட்டதன் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்கள் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.- படங்கள்
Reviewed by NEWMANNAR
on
June 20, 2014
Rating:
No comments:
Post a Comment