வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு - படங்கள்
மன்னார் கிரீன் பீல்ட் விளையாட்டுக் கழகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் இன்று ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் அக் கழக வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த காலங்களிலே இக் கழகம் சிறப்பான ஒரு கழகமாக இருந்த போதும் விளையாட்டு உபகரணங்களின் குறைபாட்டினால் அக்கழகம் சில பின்னடைவுகளை கண்டிருந்த்தது,
எனவே தான் அக் கழகத்தின் வளர்ச்சிக்காக விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. விளையாட்டுடன் மட்டும் நின்று விடாது அதனுடன் கூடிய ஒழுக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அத்துடன் குறிப்பிட்ட காலத்துக்குள் தொழில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் எமது அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெற்றதும் விளையாட்டு உபகரணங்கள் தேவைப்படும் ஏனைய கழகங்களுக்கும் சிறு சிறு உதவிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
June 19, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment