அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முசலியில் பொதுபல சேனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- படங்கள்

முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் மற்றும் மக்களின் வீடுகள்,வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களைக் கண்டித்தும்,பொது பல சேனா அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முசலி பிராந்திய பள்ளிவாயல்கள் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்டனப் பேரணி இன்று வியாழக்கிழமை(19) காலை 10.45 மணியளவில் முசலி சந்தியில் இருந்து ஆரம்பித்து சிலாவத்துறை நகரத்தினூடாக முசலிப் பிரதேச செயலகம் வரை சென்றது. 

 அதன் போது முசலி பிராந்திய பள்ளிவயல்கள் சம்மேளத்தின் நிருவாகிகளால் முசலிப் பிரதேச செயலாளரிடம் ஜனாதிபதிக்கான மனு கையளிக்கப்பட்டது. இக்கண்டனப் பேரணியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான முசலி மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தமது கவலைகளையும், உணர்வுகளையும், எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







மன்னார் முசலியில் பொதுபல சேனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- படங்கள் Reviewed by NEWMANNAR on June 19, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.