அளுத்கம,பேருவளை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் பூரண ஹர்த்தால்-நீதிமன்ற நடவடிக்கைளும் ஸ்தம்பிதம் - படங்கள்
முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் மற்றும் மக்களின் வீடுகள்,வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களைக் கண்டித்து மன்னாரில் இன்று வியாழக்கிழமை(19-06-2014) தமிழ்,முஸ்ஸிம் மக்கள் பூரண ஹர்த்தாலை அனுஸ்ரித்துள்ளனர்.
-கடந்த 15ம் திகதி அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் முஸ்லிம் வர்த்த நிலையங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-இதனால் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு முஸ்ஸிம்களின் வர்த்தக நிலையங்கள்,வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
-இந்த நிலையில் குறித்த நாசகார நடவடிக்கைகளை கண்டித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முஸ்ஸீம் உரிமைகளுக்கான அமைப்பு மேற்படி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
'முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு' இலங்கை முஸ்;லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் இனவாத வெறி தாக்குதலை கண்டித்தே மேற்படி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
மேற்படி ஹர்த்தால் தொடர்பில் துண்டுப்பிரசுரம் வாயிலாக விடுத்திருக்கும் அழைப்பில் நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி வெள்ளைக்கொடிகளை பறக்க விட்டு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த அழைப்பின் பிரகாரம் இன்று வியாழக்கிழமை (19.06.2014) மன்னார் நகரிலுள்ள தமிழ்,முஸ்ஸிம் மக்களின் வர்த்தக நிலையங்கள், வியாபார ஸ்தாபனங்கள், அங்காடி வியாபார நிலையங்கள் என்பன மூடப்பட்டு வெள்ளைக்கொடிகளையும் பறக்க விட்டு ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டது.
மன்னார் நகரில் இன்று முன்னெடுக்கப்பட்ட முழுமையான ஹர்த்தால் காரணமாக பொது மக்களின் கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகள், பொருட் கொள்வனவு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் ஸ்தம்பித நிலையை அடைந்திருக்கின்றன.
இதனிடையே மன்னார் நீதிமன்றில் பணியாற்றும் சட்டத்தரணிகளும் அளுத்கம சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக இன்றைய தினம் இடம்பெற வேண்டிய நீதிமன்ற செயற்பாடுகள் பிரிதொரு தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அளுத்கம,பேருவளை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் பூரண ஹர்த்தால்-நீதிமன்ற நடவடிக்கைளும் ஸ்தம்பிதம் - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
June 19, 2014
Rating:
No comments:
Post a Comment