அண்மைய செய்திகள்

recent
-

சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா; மீண்டும் இணையும் ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்” கூட்டணி

சிவகார்த்திக்கேயன் நடிக்கும் ரஜினி முருகன் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் வில்லனாக சமுத்திரகனி நடிக்க உள்ளாராம். சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘காக்கி சட்டை’ படத்தை இயக்கி வருகிறார் துரை.செந்தில்குமார். தனுஷ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். காக்கிச் சட்டைப் படத்தைத் தொடர்ந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குனர் பொன்ராம் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

 இந்தப்படத்திற்கு ரஜினிமுருகன் என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சூரி, ராஜ்கிரண், ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். வில்லனாக சமுத்திரகனி இப்படத்தில் கொடூர வில்லனாக வருகிறாராம் சமுத்திரகனி. சுப்ரமணியபுரம் படத்திற்குப் பின்னர் சமுத்திரகனி ஏற்க உள்ள வித்தியாசமான வில்லன் கதாபாத்திரம் இது என்கின்றனர்.

 சிவகார்த்திகேயன் இப்படத்தில் காணிகளை விற்பனை செய்யும் தரகராக நடிக்க இருக்கிறார். மதுரையில் சுற்றி நடக்கும் கதை என்பதால் முழுப்படப்பிடிப்பும் அங்கேயே இரண்டு கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. ‘அஞ்சான்’ படத்தில் நாயகியாக நடித்திருக்கும் சமந்தாவிடம், ‘ரஜினி முருகன்’ நாயகி வேடம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி என பலமான கூட்டணியோடு உருவாகும் படம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா; மீண்டும் இணையும் ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்” கூட்டணி Reviewed by NEWMANNAR on July 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.