சாதாரண தர மாணவர்கள் 1,50,000 பேர் இதுவரை அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளவில்லை
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் இதுவரை தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளவில்லை என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் உதவி ஆணையாளரை மேற்கோள்காட்டி அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களில் 16 வயதை பூர்த்திசெய்த ஒரு இலட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் போதிய தகவல்கள் இன்மையால் மூவாயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களை மீண்டும் மாணவர்களுக்கு அனுப்பி, திருத்தம் செய்வதற்கு கால அவகாசம் போதுமானதாக இல்லை எனவும் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
எனவே மாணவர்களுக்குப் பதிலாக அவர்களது பெற்றோர் ஆட்பதிவு திணைக்களத்துக்கு வருகைதந்து உரிய தகவல்களை வழங்கி துரிதமாக தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கௌ்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சாதாரண தர மாணவர்கள் 1,50,000 பேர் இதுவரை அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளவில்லை
Reviewed by NEWMANNAR
on
July 31, 2014
Rating:

No comments:
Post a Comment