போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை பாப்பரசர் சந்திக்கக் கூடும் - மன்னார் ஆயர்
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள போப் பிரான்சிஸ், போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களைச் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒரு கோரிக்கை வட–கிழக்கு தமிழ் சிவில் சமூக அமைப்பால் பாப்பரசரிடம் வைக்கப்பட்டுள்ளதை, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உறுதிப்படுத்தினார்.
பாப்பரசர் பிரான்சிஸின் பயணத்தின் போது, மடுமாதா தேவாலயத்தில் காலஞ்சென்ற ஒரு கத்தோலிக்க பாதிரியாரைப் புனிதராக அறிவிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும்,போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்திக்க வேண்டும்,
இவை இரண்டும் இல்லையென்றால், அவரது வருகையானது காலத்துக்கு முதிர்ச்சி அடையாததாகத்தான் இருக்கும் எனவும் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தார்.
பாப்பரசர் பிரான்சிஸ் தமது வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார் என்று தாங்கள் நம்புவதாகக் கூறும், மன்னார் ஆயர், தமது கோரிக்கை அவரது பிரதிநிதி மூலம் ரோமுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
மன்னார் மாவட்டம் மடுப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டவர்களை போப் சந்திப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார் பில், இறைவனிடம் அவர்களின் விடுதலைக்காக, மகிழ்ச்சிக்காக, சுதந்திரத்துக்காக மக் களுடன் சேர்ந்து அவர் அங்கு ஜெபிக்க வேண்டும் என்று தமது தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காவும், அவர்களது உரிமைகளுக்காகவுமே, நீதியையும் உண்மையையும் அடிப்படையாகக் கொண்டே அந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இலங்கை வரும் பாப்பரசர் பிரான்சிஸ், கொழும்பு மற்றும் மன்னார் பகுதியில் திருப்பலி மற்றும் ஜெபக் கூட்டங்களில் கலந்துகொண்ட பிறகு, 15 ஆம் திகதி காலை பிலிப்பைன்ஸ் செல்கிறார்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை பாப்பரசர் சந்திக்கக் கூடும் - மன்னார் ஆயர்
Reviewed by NEWMANNAR
on
July 17, 2014
Rating:

No comments:
Post a Comment