மன்னாரில் மகளிர் கண்காட்சி - படங்கள்
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த மகளிர் அபிவிருத்தி நிலையங்களின் கண்காட்சி மன்னார் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டிமேல் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கிராம அபிவிருத்தித்திணைக்கள பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன்,மன்னார் உதவி மாவட்டச் செயலாளர் எம்.பரமதாஸ் மற்றும் மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்த குமார்,முசலி பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன்,மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்தியசோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் மகளிர் அபிவிருத்தி நிலையங்களினால் தயாரிக்கப்பட்ட சுய தொழில் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில் குறித்த காண்கட்சியை வருகை தந்த அதிகாரிகள் ஆரம்பித்து வைத்து பார்வையிட்டனர்.
இதன் போது கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மலிவு விற்பனையாகவும் விற்பனை செய்யப்பட்டது.
மன்னாரில் மகளிர் கண்காட்சி - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 17, 2014
Rating:
No comments:
Post a Comment