அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் ஏற்பாட்டில் 114 குடும்பங்களுக்கு இலவச குடி நீர் திட்டம்- படங்கள்

அமைச்சர் றிஸாட் பதியுதீனின் ஏற்பாட்டில் மன்னாரில் 114 தமிழ்,முஸ்ஸிம் குடும்பங்களுக்கு இலவச குடி நீர் திட்டம் வழங்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தெரிவு செய்யப்பட்ட 114 குடும்பத்தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட சந்திப்பு ஒன்று மன்னார் உப்புக்குளம் பிரதான வீதியில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் மன்னார் நகர சபையின் உறுப்பினர் என்.எம்.நகுசின் தலைமையில் இடம் பெற்றது.

 இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னார் உப்புக்குளம் வடக்கு,உபபுக்குளம் தெற்கு,பள்ளிமுனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 114 குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர். இதன் போது அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,கைத்தொழில் வாணிப அமைச்சின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் முஜீபுல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 இதன் போது பயனாளிகளின் தெரிவுகள் தொடர்பிலும், குடி நீர் இணைப்புக்கள் வழங்குவது தொடர்பிலும் பயனாளிகளுக்கு தெளிவு படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







மன்னாரில் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் ஏற்பாட்டில் 114 குடும்பங்களுக்கு இலவச குடி நீர் திட்டம்- படங்கள் Reviewed by Admin on July 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.