மதவாச்சி நகரில் கஞ்சாவுடன் மூவர் கைது
சுமார் 16 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் மதவாச்சி நகரில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்சொன்றின் சாரதியும், இரண்டு உதவியாளர்களும் சந்தேகத்தின் பேரில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஸ்ஸின் பின்புறத்தில் இரண்டு பயணப் பொதிகளில் கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்களை இன்று ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மதவாச்சி நகரில் கஞ்சாவுடன் மூவர் கைது
Reviewed by NEWMANNAR
on
July 19, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 19, 2014
Rating:


No comments:
Post a Comment