யாழில் பவுசர் மூலம் குடிநீரை விநியோகிக்கத் தீர்மானம்
யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பவுசர் மூலம் குடிநீரை விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை முதல் பவுசர்கள் மூலம் காரை நகர் பகுதிக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுதுரை ஐங்கரநேசன் கூறினார்
நிலவும் வறட்சியால் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளுக்கு ஏற்கனவே பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வறட்சி காரணமாக நீர்தேக்கங்களின் நீர்மட்டம் 20 வீதம் வரை குறைவடைந்துள்ளது
இதனால் யாழ்ப்பாணம், திருணேமலை, அம்பாறை, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
யாழில் பவுசர் மூலம் குடிநீரை விநியோகிக்கத் தீர்மானம்
Reviewed by NEWMANNAR
on
July 20, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 20, 2014
Rating:


No comments:
Post a Comment