ஓய்வூதியத்தில் மாற்றமில்லை-மங்கள ரந்தெனிய
கொரியாவில் பணியாற்றுகின்ற இலங்கையர்களுக்கு, அந்த நாட்டில் வழங்கப்படுகின்ற ஓய்வூதிய நிதியில், எவ்வித மாற்றமும் இன்றி வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் இன்று (29) வெளியிடப்பட்ட விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள போலியான தகவல்களைக் கண்டு, ஏமாற வேண்டாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தரவுகளுக்கு அமைய, 26 ஆயிரம் இலங்கையர்கள் கொரியாவில் பணியாற்றி வருகின்றனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய இதுபற்றித் தெரிவிக்கையில்,,,,,
இந்த விடயம் தொடர்பில் சமூக பாதுகாப்பு சபைக்கு சில பிரேரணைகளை முன்வைக்க வேண்டியிருந்தது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி சேவைகள் அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றுடன் கலந்துரையாடல்களை நடாத்தாது, கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. சமூக பாதுகாப்பு சபையின் தலைவரினால் வெளியிடப்பட்ட கருத்தை அடுத்தே, இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
கொரிய அரசாங்கம், அந்த நாட்டின் சமூக பாதுகாப்பு சபையின் ஊடாக அறிமுகப்படுத்தியுள்ள குப்மீன் எனப்படுகின்ற ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வர இலங்கை திட்டமிடவில்லை. தென் கொரியாவிலுள்ள பணியாளர்கள் இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு உரிமையுள்ளவர்களாக இருக்க முடியும். அந்த ஓய்வூதியத் திட்டத்தை, பணியாளர்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறும் சந்தர்ப்பத்தில், அவர்களின் வங்கி கணக்குகள் ஊடாக வழங்க முடியும். அதில் எந்தவிதமான மாற்றமும் இடம்பெறாது,
என்றார்.
ஓய்வூதியத்தில் மாற்றமில்லை-மங்கள ரந்தெனிய
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:


No comments:
Post a Comment