மாந்தை மேற்கில் இளைஞர் மத்திய நிலையங்கள் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு-படங்கள்
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் சிறுவர் நிதியத்தின் நிதியுதவியுடன் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 13 கிராமங்களில் இளைஞர் மத்திய நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று(30) இடம் பெற்றது.
ஒரு மத்திய நிலையம் 13 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.
குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தேசிய இளைஞர் சேவைகள்மன்றத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பி.பூலோகராஜா ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கில் இளைஞர் மத்திய நிலையங்கள் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 31, 2014
Rating:

No comments:
Post a Comment