இன்று முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
தபால் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன குறிப்பிடுகின்றார்.
புதிய திருத்தங்களுக்கு அமைய, அதி குறைந்த தபால் கட்டணம் 5 ரூபாவில் இருந்து 10 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முத்திரையொன்றின் விலை 5 ரூபாவில் இருந்து, 8 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய திருத்தங்களுக்கு அமைய, 20 கிராம் வரையான நிறை கொண்ட சாதாரண கடிதமொன்றுக்கு 10 ரூபா முத்திரையும், அதே நிறைகொண்ட வர்த்தக கடிதமொன்றுக்கு 15 ரூபாவும் அறவிடப்படும்.
எவ்வாறாயினும், பதிவுத் தபாலுக்காக அறவிடப்படும் 25 ரூபா கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என தபால் மாஅதிபர் சுட்டிக்காட்டினார்.
250 கிராம் நிறைகொண்ட தபால் பொதிக்கு 90 ரூபா கட்டணம் அறவிடப்படுவதாகவும், அதற்கு மேலதிகமான தலா 250 கிராமிற்கும் 20 ரூபாவால் கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்த கட்டணம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்ட தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன, 6 வருடங்களின் பின்னர் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இன்று முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
Reviewed by NEWMANNAR
on
July 31, 2014
Rating:

No comments:
Post a Comment