குவைத்தில் இலங்கை பெண் கொலை
குவைத் நாட்டில் தொழில் புரிந்து வந்த இலங்கையர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி தனது மனைவியை கொலை செய்துள்ளார்.
இவர்கள் வசித்து வந்த வாடகை வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குவைத் பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி தகவலை அடுத்து இறந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பில் பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்திய போது, அவரது மனைவியை வேறு ஒரு பெண் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.
எனினும் அவரிடம் தொடர்ந்தும் நடத்தப்பட்ட விசாரணைகளில் தானே மனைவியை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
சந்தேக நபரது கள்ளத் தொடர்பு பற்றி மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த கொலை நடந்துள்ளதாக குவைத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குவைத்தில் இலங்கை பெண் கொலை
Reviewed by NEWMANNAR
on
July 26, 2014
Rating:

No comments:
Post a Comment