முகப்பருவை போக்கும் துளசி பவுடர்
துளசி, சந்தனம், வெட்டிவேர்… இன்னும் பல மூலிகைகள் அடங்கியது என்று பல விளம்பரங்கள் சொல்லக் கேட்டிருப்போம். அழகுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே சுவீகரித்துக் கொள்ளும் அளவுக்கு அழகு பலன்கள் நிரம்பியது துளசி!
பொதுவாக, குளிர்காலத்தில் பருக்கள் வராது. வந்தால் சீக்கிரத்தில் போகாது.
இப்படி வரும் பருக்களை விரட்டியடிக்கிறது துளசி பேக் சந்தனத்தூள், எலுமிச்சைச்சாறு, துளசிச்சாறு, வெட்டிவேர் பவுடர் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, கலந்து பருக்கள் மீது தடவி, ஐந்து நிமிடம் கழித்து கழுவுங்கள். ஒரே வாரத்தில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
பனிக்காலத்தில் மேக்கப் போடும்போது முகத்தில் நீர் கோத்துக் கொண்டு பொத பொதவென்று ஆகிவிடும்.
இதற்கும் தீர்வு இருக்கிறது. 10 துளசி இலையுடன், சுக்குப் பவுடர் 2 சிட்டிகை லவங்கம் 1 இவை மூன்றையும் நன்றாக அரைத்து, முகத்தில் தடவி கழுவுங் கள். பிறகு மேக்கப் போடுங்கள்.
தோல் இறுக்கமாகும்.
பற்களைத் தூய்மையாக்கி, பளிச்சிட வைப்பதில் துளசிக்கு பெரும்பங்கு உண்டு. சம்பா கோதுமையை வறுத்து அரைத்த பவுடர் ஒரு கப், துளசி பவுடர், சர்க்கரை – தலா கால் கப், பொடித்த பச்சைக் கற்பூரம் – 10 கிராம். இவற்றை சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இந்தப் பவுடரால் தினமும் பல் தேய்த்து வர, பல் கூச்சம், வாய் துர்நாற்றம், ஈறு வீக்கம் போன்றவை நீங்கி, பற்கள் பளபளக்கும்.
முகப்பருவை போக்கும் துளசி பவுடர்
Reviewed by NEWMANNAR
on
July 30, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 30, 2014
Rating:


No comments:
Post a Comment