திருமணத்துக்கு அவசரம் இல்லை
திருமணத்துக்கு அவசரம் இல்லை என்றார் லட்சுமிமேனன். இதுபற்றி அவர் கூறியதாவது,,
இப்போதைக்கு எனது கவனம் நடிப்பில்தான் இருக்கிறது. இப்போதுதான் நான் வளர்ந்து வருகிறேன். இந்த சமயத்தில் திருமணம் செய்துகொள்ளும் திட்டம் எதுவும் இல்லை.
ஏற்கனவே என்னைவிட சீனியர் நடிகைகள் பலர் இன்னும் நல்ல வேடங்களில் நடித்து வருகின்றனர். அவர்களின் வழியைத்தான் நானும் பின்பற்றுகிறேன். சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என்பது ஆசை. அதேபோல் அஜீத், விஜய் ஆகியோருடன் நடிக்க காத்திருக்கிறேன்.
மலையாளத்தில் மம்முட்டியுடன் நடிக்க வேண்டும். விஷாலுடன் என்னை இணைத்து கிசுகிசு வருகிறது. அவருடன் 2 படங்களில் இணைந்து நடித்தேன். இரண்டும் வெற்றியாக அமைந்தது. அவருடன் நடிக்கும்போது எனக்கு எந்தவொரு அசவுகரியமும் கிடையாது.இவ்வாறு லட்சுமி மேனன் கூறினார்.
திருமணத்துக்கு அவசரம் இல்லை
Reviewed by NEWMANNAR
on
August 09, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 09, 2014
Rating:


No comments:
Post a Comment