அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் சீரற்ற வானிலையால் 322 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 300 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 267 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

 கடும் காற்று காரணமாக திருகோணமலையில் 35 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் சரத் லால் குமார தெரிவித்துள்ளார். காலி ஜின் கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 அதேவேளை காலி, மாத்தறை மாவட்டங்கள், மத்திய, சபரகமுவ மாகாணங்களில் கனமழை பெய்யக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
நாட்டில் சீரற்ற வானிலையால் 322 குடும்பங்கள் பாதிப்பு Reviewed by NEWMANNAR on August 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.