முசலி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக உள்ளவாங்கல்
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணியாற்றிய 36 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 4 முகாமையாளர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி முகாமையாளாராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என தெரிவித்த கடித்தினை இன்று காலை 10 மணியளவில் முசலி பிரதேச செயலகத்தில் முசலி பிரதேச செயலாளர் செல்லத்துரை கேதீஸ்வரன் மற்றும் முசலி பிரதேச சபை தவிசாளர் எஹியா பாய் வழங்கி வைத்தார்கள்.
முசலி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடந்த வருடம் கைத்தொழில் மற்றும் வணிக துறை அமைச்சர் றிசாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
முசலி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக உள்ளவாங்கல்
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:


No comments:
Post a Comment