பொது பல சேனா அமைப்பின் நடவடிக்கைளை அரசு ஏற்று செயற்படுமாக இருந்தால் அரசு பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
பொது பல சேனா அமைப்பின் நடவடிக்கைளை அரசு ஏற்று செயற்படுமாக இருந்தால் அரசு பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வழியுருத்தியுள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்படுகையில்,,,,,
தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் அமைப்பாக பொதுபல சேனா என்ற இனவாத அமைப்பு திகழ்ந்து வருகின்றது.
குறித்த அமைப்பு இனவாதத்தை தூண்டுகின்ற ஒரு அமைப்பாக செயற்படுகின்றது.
அந்த வகையிலே மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பொதுபல சேனா வெளியிட்டுள்ளது.இக்கருத்து மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடையம்.
ஆயர் ஆவர்கள் மக்களின் பிரச்சினைகளை நீதியான முறையில் வெளிக்கொண்டு வருவது வழக்கம்.தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகள்,அநீதிகள்,இராணுவத்தின் பிரசன்னம்,மனித உரிமை மீறல்கள் போன்ற மக்களின் பிரச்சினையை அவரின் செயற்பாட்டின் ஊடாக வெளிக்கொண்டு வருவது வளக்கம்.
இதனைத்தான் மன்னாரில் இடம் பெற்ற காணாமல் போனவர்கள் தொர்பில் விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையிலும் தனது கருத்தை சுயமாக தெரிவித்தார்.
ஜனநாயகம் என்று பேசப்படுகின்ற இந்த நாட்டில் கருத்துக்கள் கூறப்படுகின்ற போது வெளிவரும் மாற்றுக்கருத்துக்களின் அடிப்படையில் இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா? என்ற கேல்வி எழும்புகின்றது.
இந்த நாட்டில் பத்திரிக்ககைச் சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது.எங்களுடைய மக்கள் இராணுவத்தினரால் நசுக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் தனது கருத்தை நேர்மையாகச் சென்ன ஆயர் அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை பொதுபல சேனா வின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முன்வைத்துள்ளார்.
எங்களைப்பொருத்தமட்டிலே நியாயவாதிகள் யாராக இருந்தாலும் எங்களுடைய மக்களின் நியாயமான கோரிக்கைகளை தட்டிக்கேட்கின்ற யாராக இருந்தாலும் அவர்களுக்கு தீங்கு எதுவும் ஏற்படுத்தப்பட்டால் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
அந்த வகையிலே எங்களுடைய ஆயர் அவர்களை கைது செய்வது தொடர்பாக பொது பல சேனா என்ற அமைப்பின் நடவடிக்கைளை அரசு ஏற்று செயற்படுமாக இருந்தால் அரசு பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.வடக்கு கிழக்கு மக்கள் கொந்தழித்து செயற்படுகின்ற நிலமை ஏற்படும்.
நியாயவாதிகளை அடக்க நினைப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் என்பதனை கூற விரும்புகின்றேன்.என குறித்த அறிக்கைளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது பல சேனா அமைப்பின் நடவடிக்கைளை அரசு ஏற்று செயற்படுமாக இருந்தால் அரசு பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:


No comments:
Post a Comment