நான்கு வயது மகனைக் கடலில் எறிந்து கொன்ற தாய்க்கு விளக்கமறியல்
நான்கு வயதான தனது மகனைக் கடலில் வீசிக் கொன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 32 வயதுப் பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை மேலதிக நீதிவான் மஞ்சுள கருணாரத்ன நேற்றுமுன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
வெல்லவாய, ஹந்தபானாகல, ஆந்தவெலயாய பிரதேசவாசியான முதியன்சலாகே சோமலதா எனும் 32 வயதான இரு பிள்ளைகளின் தாய்க்கே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தப் பெண் வெலிகம, மிதிகம, தேனுவல பிரதேசத்தில் தனது நான்கு வயது இளைய மகனைக் கடலில் வீசிவிட்டு தானும் கடலில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது மீனவர்கள் சிலரால் மீட்கப்பட்டார்.
கடலில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் அஹங்கம, கொன்னகஹாஹேன வைத்தியசா லையில் சேர்க்கப்பட்டபோதே உயிரிழந்தார். அதே வைத்தியசாலையில் சேர்க் கப்பட்ட தாய் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மாத்தறை மேலதிக நீதிவான் இந்தப் பெண் சிகிச்சை பெற்றுக்கொண் டிருந்த 25ஆம் இலக்க வார்டுக்கு விஜயம்செய்து அவரைப் பார்வையிட்ட பின் இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்ததுடன், வழக்கை எதிர்வரும் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
நான்கு வயது மகனைக் கடலில் எறிந்து கொன்ற தாய்க்கு விளக்கமறியல்
Reviewed by NEWMANNAR
on
August 24, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 24, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment