மன்னார் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக முஹம்மது இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீன் தெரிவு
மன்னார் பிரதேச சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பாக கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட அப்துல் முத்தலிப் முஹம்மது றிஷாபி மேற்படிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு அவரிற்குப் பதிலாக முஹம்மது இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீன் தேர்தல் ஆணையாளரின் அனுமதியுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வடமாகாண சபைத் தேர்தலின்போது அப்துல் முத்தலிப் முஹம்மது றிஷாபி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சியில் இருந்து கொண்டு அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதாகவும் அது தொடர்பான ஆதாரங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடத்திற்கு தெரியப்படுத்தப்பட்டதன் காரணமாக முஹமட் றிஷாபி கட்சியின் விசாரணைகளுக்கு பல முறை அழைக்கப்பட்ட போதிலும் அவர் அதற்கு செல்லாத காரணத்தால் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்த கட்சி மேற்படி நபரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முடிவெடுத்து அதனை கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளு மன்ற உறுப்பினருமான ஹஸன் அலியினால் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டு அவரின் இடத்திற்கு அத்தேர்தலில் போட்டியிட்டு அடுத்த இடத்தில் இருந்த புதிய உறுப்பினரான முஹம்மது இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீன் என்பவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
மேற்படிப் பரிந்துரைக்கு அமைவாக தேர்தல் ஆணையாளர் புதிய உறுப்பினரின் பெயரை ஏற்றுக் கொண்டு கட்சிக்கு மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளர் அரவிந்த ராஜ் ஊடாக எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பபினர் முத்தலிப்பாபா பாறுக் தெரிவித்தார்.
எருக்கலம் பிட்டியைச் சேர்ந்த ஆசிரியர்களான முஹம்மது இஸ்மாயில் மற்றும் உம்மு ஹபீபா தம்பதிகளின் புதல்வாரன முஹம்மது இஸ்ஸதீன் ஒரு சிறந்த சமுக சேவையாளரும், கட்சிக்கு சிறப்பாக செயலாற்றக் கூடியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக முஹம்மது இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீன் தெரிவு
Reviewed by NEWMANNAR
on
August 19, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 19, 2014
Rating:



No comments:
Post a Comment