சுமார் நூறு கைதிகள் வரை சிறையிலிருந்து தப்பியோட்டம்
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் நூறு கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தப்பிச் சென்றுள்ளவர்களில் 80 வீதமானவர்கள் சிறைச்சாலை வளாகத்திற்குள் தங்க வைக்கப்பட்டிருந்த கைதிகளும், இதர பணிகளுக்காக வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கைதிகளும் காணப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் , பொறுப்பதிகாரியுமான டீ.என். உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
தப்பிச் சென்றிருந்தவர்களில் நீதிமன்ற விசாரணைகளின் போது ஆஜராகிய சிலர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ள கைதிகளை கைது செய்வதற்கான தகவல்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் , பொறுப்பதிகாரியுமான டீ.என். உபுல்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் நூறு கைதிகள் வரை சிறையிலிருந்து தப்பியோட்டம்
Reviewed by NEWMANNAR
on
August 24, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 24, 2014
Rating:


No comments:
Post a Comment