வரட்சி நிலவிய பல மாவட்டங்களில் மழை
வரட்சி நிலவிய பல மாவட்டங்களில் நேற்றிரவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தில் ஆறு மாதங்களாக நிலவிய வரட்சியை அடுத்து நேற்றிரவு முதல் மழை பொய்துவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் 35 பாகை செல்சியசாக காணப்பட்ட வெப்பநிலை நேற்று முதல் 25 பாகை செல்சியசாக குறைவடைந்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் மஹிந்த செனவிரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும் போதியளவு மழை வீழ்ச்சிய கிடைக்காமையால் நீர்த்தேக்கங்களில் நீரை சேமிக்க முடியாத நிலை காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
72 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 14 வீதமாக குறைவடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களத்தின் நீர் முகாமத்துவ பணிப்பாளர் மீகஸ்தென்ன குறிப்பிட்டார்.
அநுராதபுரம், அம்பாறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மழை பெய்துள்ளது.
இதனிடையே நாடு முழுவதிலும் இன்று மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வரட்சி நிலவிய பல மாவட்டங்களில் மழை
Reviewed by NEWMANNAR
on
August 19, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 19, 2014
Rating:


No comments:
Post a Comment