அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சிறுவர் பூங்கா வீதியில் விபத்து-ஒருவர் காயம்-(Photos)

மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை(19) மாலை 5.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

-மன்னார் பஸார் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிலில் பயணித்த ஒருவரும்,முச்சக்கர வண்டியுமே மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

-காயமடைந்தவர் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

-மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக மன்னார் முச்சக்கர வண்டி தரிப்பிடம் அமைந்துள்ளது.எனினும் முச்சக்கர வண்டிகளை அதன் உரிமையாளர்கள் தரிப்பிடத்தினுள் நிறுத்தி சேவையில் ஈடுபடாது தரிப்பிடத்திற்கு முன்பும்,வீதியோரங்களிலும் நிறுத்தி தமது சேவையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் முச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கு முன்பாக நாளாந்தம் வாகன நெரிசல் ஏற்படுவதோடு மக்கள் நடந்தும்,துவிச்சக்கர வண்டிகளிலும் செல்ல முடியாது உள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

-கட்டுப்பாடுகள் அற்ற நிலையில் வீதியோரங்களில் முச்சக்கர வண்டிகள் நிறுத்தப்பட்டுவதினால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

-நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்ற விபத்து முச்சக்கர வண்டி சாரதியின் கவனயீனத்தினாலேயே ஏற்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

-தொடர்ந்தும் முச்சக்கர வண்டிகள் வீதியில் நிறுத்தப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.எனவே இவ்விடையத்தில் மன்னார் போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் நிருபர்

(20-09-2014)






மன்னார் சிறுவர் பூங்கா வீதியில் விபத்து-ஒருவர் காயம்-(Photos) Reviewed by NEWMANNAR on September 20, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.